2024 ஆண்டு மாநாடு

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ் மொழி!

மொத்த பங்கேற்பாளர்கள் 600

27 ஏப்ரல் 2024
9:00 காலை - 2:00 மாலை
கிராண்ட் ஹால், சைபர் ஜெயா பல்கலைக்கழகம்.

தமிழ் அமுது 1, 2024 ஓர் இலக்கிய விழா. ஒரு விருது விழா. பழன் அறவாரியத்தின் ஆதரவில் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தலைமையேற்று இந்த இலக்கிய விழா நடைபெற்றுது.

இலக்கியம் பேசுவோரும் சரி, இலக்கிய உரைகளைக் கேட்போரும் சரி, இலக்கியத்தை ரசிப்போரும் சரி அனைவருக்குமே இது ஒரு மிகச்சிறந்த இலக்கிய விருந்தாக அமைந்தது.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் குறளுக்கு ஏற்ப சிறந்த இலக்கிய உரைகளைக் கேட்டு மகிழிந்தனர்.

தமிழ்நாட்டுத் தன்முனைப்புப் பேச்சாளர் ஐ.பி.எஸ் கலியமூர்த்தியின் சிறப்புரை, புகழ் பெற்ற பேச்சாளர் பாண்டித்துரையின் உரை, முன்னாள் காவல்துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகனின் இலக்கிய உரை என செவிக்கினிய உரைகளைக் அரங்கேறியது.

சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பழன் அறவாரியத்தின் ஆலோசகருமான டான்ஸ்ரீ பழன் இந்த நிகழ்ச்சியைத் தலைமை உரையாற்றித் தொடக்கி வைத்தார்.

ஓர் இலக்கியவாதியாகவும், அரசியல்வாதியாகவும் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான மஇகாவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி இலவசமாகப் பொதுமக்களுக்காக, இலக்கிய ஆர்வலர்களுக்காக படைக்கப்படுகிறது. வருகின்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டது.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் இளைப்பாற இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் அவசியம் தேவை.

ஏப்ரல் மாதம் 27ஆம் நாள், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, சிலாங்கூரில் உள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் இலவசமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர்.

சுருக்கம்
2024 மாநாடு

பழன் அறவாரியத்தின் ஆதரவில், டத்தோஸ்ரீ தெய்வீகன் ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்த இலக்கிய விழா, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது. தமிழ் இலக்கியத்தைக் கௌரவிக்கும் சிறந்த உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 

இந்த இலக்கிய விழா, உரைகள் மட்டுமின்றி, பாடல்கள் மற்றும் நடனங்களுடன் கலை நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்காக இலவசமாக நடைபெற்றது. மேலும், காலை சிற்றுண்டியும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டன.

பேச்சாளர்கள்

Palan

தான்ஸ்ரீ டாக்டர் ஆர்.பழன்

இணை வேந்தர் சைபர் ஜெயா பல்கலைக்கழகம்
Saravanan

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
Paandidurai

சி.பாண்டித்துரை

வழக்கறிஞர்
Thevygan

டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன்

தலைவர் கோ.சா கல்வி அறவாரியம்
KaliyaMurthy

பேராசிரியர் முனைவர் கலியமூர்த்தி

இந்திய காவல் சேவை
தமிழ் நாடு